
நமது கட்சியைப் பற்றி
லட்சிய ஜனநாயகக் கட்சி (எல்.ஜே.கே.), புதுச்சேரியின் முழுமையான வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கட்சி. மற்ற அரசியல் கட்சிகளைப் போல சாதிய ரீதியாக வேர் எடுத்து நிற்கும் சாதாரண கட்சியல்ல லட்சிய ஜனநாயகக் கட்சி. புதுச்சேரியில் தற்போது நிலவும் சிண்டிகேட் ராஜ்ஜியத்தை ஒழித்து, புதுச்சேரியின் தேக்கநிலையை நீக்கி, புதிய சீர்மிகு அரசை உருவாக்குவதுதான் லட்சிய ஜனநாயகக் கட்சியின் நோக்கம்.
சிறந்த ஆட்சிநிர்வாகத்தை வெறும் வாய் வார்த்தைகளால் உருவாக்க முடியாது. தொழில்முறையிலான சீரிய திட்டங்களால்தான் சிறந்த அரசை, சீர்மிகுந்த அரசாட்சியை உருவாக்க முடியும் என லட்சிய ஜனநாயகக் கட்சி நம்புகிறது. மணலில் தொடங்கி செயற்கைக்கோள் வரை என்பது எங்களது சிந்தாந்த அணுகுமுறை. அந்த அடிப்படையில்தான் ஐந்தாயிரம் மாணவர்களை ஒருங்கிணைத்து செயற்கைக்கோள்களை வடிவமைக்க வைத்தோம். புதுச்சேரி நிர்வாகத்துக்காக ரயில்வே சுற்றுலாவை புரட்சிகரமாக மேம்படுத்தியுள்ளோம்.


தொலைநோக்குத்திட்டம் தன்னிறைவு கொண்ட புதுச்சேரி
நமது குறிக்கோள் அல்லது இலக்கு தனித்துவமான உயர் லட்சியம் கொண்ட குறிக்கோள். நமது புதுச்சேரி மாநிலத்தின் உள்கட்டமைப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதே நமது உணமையான லட்சியம். சிங்கப்பூரின் செயல் திறனையும், அதன் வளத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்த மகத்தான லட்சியத்தை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டிருக்கிறோம். இது தெளிவில்லாத மாயக் கனவு அல்ல. இந்த கனவை நனவாக்க, இந்த குறிக்கோளை மெய்ப்பிக்க, நமது தலைவர் ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதுச்சேரியின் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தை, அதற்கான வழிமுறையை வகுத்துள்ளார். சரியான இடங்களில் மேம்பாலங்கள், புதுச்சேரியில் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை, கடற்கரையோர சுற்றுலாவை உலகத்தரத்தில் சிறப்பாக விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களில் இந்த செயல்திட்டம் கவனம் செலுத்துகிறது.
பொது புகார் படிவம்
Public Grievance Form
உங்கள் பிரச்சனையை எங்களிடம் பகிருங்கள். நாங்கள் உதவுவோம்.
Share your problem with us. We will help.
எல்.ஜே.கே கொள்கையின் அடித்தளம்:
- மக்கள் நலனே எமது லட்சியம்...
- மக்கள் நலனே எமது கொள்கை...
- மக்கள் நலனே எமது அரசியல்...
நலன்புரிதல் என்பது ஒரு சேவை மட்டுமல்ல — அது சமூக நீதிக்கான எங்கள் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். எல்.ஜே.கே நலவாரியம் கட்சியை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் “சேவை கரம்” ஆக செயல்படுகிறது:
தொடர்ச்சியான ஆதரவு:
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள்.
அரசு அணுகுமுறை:
பயனாளர்கள் தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற விழிப்புணர்வு, ஆவண உதவி மற்றும் தொடர்ந்த கண்காணிப்பு வழங்குதல்.
அவசர நிலை மேலாண்மை:
வெள்ளம், தொற்றுநோய் அல்லது விபத்துகள் போன்ற சூழ்நிலைகளில் உள்ளூர் உதவி மையங்களை அமைத்தல்.

புதுச்சேரி மாவட்ட அமைப்பு
Puducherry District Organization — 4 Districts · 30 Constituencies
புதுச்சேரி
Puducherry District
தொகுதிகள்
Constituencies · 23 seats
மன்னாடிப்பேட்டை
Mannadipet
திருபுவனை
Thirubuvanai
ஓசூது
Ossudu
மங்கலம்
Mangalam
வில்லியனூர்
Villianur
ஒழுகரை
Ozhukarai
கதிர்காமம்
Kadirkamam
இந்திரா நகர்
Indira Nagar
தட்டாஞ்சாவடி
Thattanchavadi
காமராஜ் நகர்
Kamaraj Nagar
லாஸ்பேட்டை
Lawspet
கலாப்பேட்டை
Kalapet
முத்தியால்பேட்டை
Muthialpet
ராஜ் பவன்
Raj Bhavan
ஔபாளம்
Oupalam
ஓர்லியன்பேட்டை
Orleampeth
நெல்லித்தோப்பு
Nellithope
முதலியார்பேட்டை
Mudaliarpet
ஆரியன்குப்பம்
Ariankuppam
மணவேலி
Manavely
எம்பலம்
Embalam
நெட்டப்பாக்கம்
Nettapakkam
பாகூர்
Bahour
லட்சிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பங்களியுங்கள்.